இவ்விடத்தில் சனீஸ்வர பகவானை 80 அடி உயர மகரகும்ப வாயில் வழியாக சென்று அவரை தரிசிப்பது சிறப்புடையாதகும், மேலும் இந்த ஆலயத்தில் சனி பகவானின் உக்கரத்தை தனிப்பதர்க்காக ஆதி சங்கரர் திருவாளிக்காவில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரியின் உக்கிர சக்தியை குறைப்பதற்கு ஸ்ரீ சக்கர தாடங்க பிரதிஷ்டை செய்து எதிரில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளார். அதேபால் இந்த ஆலயத்தில் சனிபகவானின் உக்கரத்தை கனிப்பதர்க்காக இருவருக்கு ஸ்ரீ சக்கர தாடங்கம் பிரதிஷ்டை செய்து. எதிரில் 54 அடி உயரம எங்கும் காணமுடியது அளவு கிரஹசாந்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. மேலும் இங்கு சனிபகவானுக்கு கழகு வாகனமும் காகக் கொடியும் அமைந்துள்ளது.
இங்கு சனிபகாவன் அவர் மனைவி நீலா தேவி ஜேஷ்டா தேவி அவரின் குமாரர்கள் மாந்தி, குளிகன் ஆகியோருடன் அருள்பாலிக்கின்றார். இவ்வாலயத்தில் விநாயகர் வல்லபா தேவி யோடும், முருகப்பெருமான் தேவ சேனா வோடும், சிவபெருமான் பார்வதி தேவி யோடும், திருமண கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பு அம்சமாகும்.
இம்மூன்று தெய்வங்களையும் திருமண கோலத்தில் ஒரேயிடத்தில காண்பது சிறப்பாகும். நவக்கிரஹங்களை தரிசித்து உடன் ஷாட்குன்ய தேவதைகளையும் (துர்கா பரமேஸ்வரி, கணபதி, க்ஷேத்ரபாலகர், பைரவர் அபயங்கார், வாஸ்துருன்) உடன் தரிசனம் செய்தால் சனிபகவானின் அருள் உடன் கிட்ட வாய்ப்பு உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோயிலிற்கு வந்து சனி பகவானை நல்ல பலனை அடைய அனைவரும் வாருங்கள்.
புதுவை மாநிலத்திற்கு வட திசையில் அமைந்துள்ள சூரியததோட்டம் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து தேர்ந்து எடுத்து குளோப் என்னும் படியான தியானமண்டபம் சிறப்பாக அமைந்துள்ளது (ஆரோவில் குலோப்). இவ்விடத்தில் கழுவெளிசித்தர், மொரட்டாண்டி சித்தர் இருவரும் வாழ்ந்த சித்த பூமியாகும். இவ்விடத்தை •ற்றி பஞ்சவடீ என்னும் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலும் மத்தியில் சனீஸ்வர பகவான் க்ஷேத்திரமும் வடகிழக்கில் பிரத்தியங்கரா திருக்கோயிலும் கிழக்கு திசையில் புதுவை மணக்குள விநாயகர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
Read more..
நவகிரகங்களில் மிக முக்கியமான ஆயுள் காரகனான சனி பகவான் 27 நட்சத்திரங்களின் எண்ணிக்கையை ஆதாரமாக கொண்டு 27 அடி உயரத்தில் 12 ராசிகளை பீடமாக கொண்டு இன்முகத்துடன் கழகு வாகனத்தில் அபய சனைஸ்சரராக அருள் பாலிக்கின்றார். இவரை வணங்குபவர்க்கு 7 1/2 சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி காலங்களில் இன்னல்கல் நீக்கி வேண்டுவன தந்து அருள்பாலிக்கின்றார். இந்த ஆலயத்தின் சிறப்பே சனிபகவானின் மகர கும்ப இராசிகளை ஆதரமாகக் கொண்டு எழுபப்பட்ட மகர கும்ப வாயிலே ஆகும். இதன் வாயிலாக இறைவனை தரிசித்தால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். இந்த ஆலயமானது ஜோதிஷ சம்ராட் சிவஸ்ரீ. சிதம்பர குருக்கள் அவர்கள் தலைமையில் சிறப்பாக நிர்வாகிக்ப்படுகிறது.
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |