Surya Graha Parihara Sthalam
Chandran Parihara Sthalam
Sevvai Dosham Parihara Sthalam
Budhan Parihara Sthalam
Guru Parihara sthalam
Sukran Parihara Sthalam
Sani Dosha Parihara Sthalam
Rahu Parihara Sthalam
Ketu Parihara Sthalam

About Temple

இவ்விடத்தில் சனீஸ்வர பகவானை 80 அடி உயர மகரகும்ப வாயில் வழியாக சென்று அவரை தரிசிப்பது சிறப்புடையாதகும், மேலும் இந்த ஆலயத்தில் சனி பகவானின் உக்கரத்தை தனிப்பதர்க்காக ஆதி சங்கரர் திருவாளிக்காவில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரியின் உக்கிர சக்தியை குறைப்பதற்கு ஸ்ரீ சக்கர தாடங்க பிரதிஷ்டை செய்து எதிரில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளார். அதேபால் இந்த ஆலயத்தில் சனிபகவானின் உக்கரத்தை கனிப்பதர்க்காக இருவருக்கு ஸ்ரீ சக்கர தாடங்கம் பிரதிஷ்டை செய்து. எதிரில் 54 அடி உயரம எங்கும் காணமுடியது அளவு கிரஹசாந்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. மேலும் இங்கு சனிபகவானுக்கு கழகு வாகனமும் காகக் கொடியும் அமைந்துள்ளது.

இங்கு சனிபகாவன் அவர் மனைவி நீலா தேவி ஜேஷ்டா தேவி அவரின் குமாரர்கள் மாந்தி, குளிகன் ஆகியோருடன் அருள்பாலிக்கின்றார். இவ்வாலயத்தில் விநாயகர் வல்லபா தேவி யோடும், முருகப்பெருமான் தேவ சேனா வோடும், சிவபெருமான் பார்வதி தேவி யோடும், திருமண கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பு அம்சமாகும்.

இம்மூன்று தெய்வங்களையும் திருமண கோலத்தில் ஒரேயிடத்தில காண்பது சிறப்பாகும். நவக்கிரஹங்களை தரிசித்து உடன் ஷாட்குன்ய தேவதைகளையும் (துர்கா பரமேஸ்வரி, கணபதி, க்ஷேத்ரபாலகர், பைரவர் அபயங்கார், வாஸ்துரு­ன்) உடன் தரிசனம் செய்தால் சனிபகவானின் அருள் உடன் கிட்ட வாய்ப்பு உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோயிலிற்கு வந்து சனி பகவானை நல்ல பலனை அடைய அனைவரும் வாருங்கள்.

புதுவை மாநிலத்திற்கு வட திசையில் அமைந்துள்ள சூரியததோட்டம் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து தேர்ந்து எடுத்து குளோப் என்னும் படியான தியானமண்டபம் சிறப்பாக அமைந்துள்ளது (ஆரோவில் குலோப்). இவ்விடத்தில் கழுவெளிசித்தர், மொரட்டாண்டி சித்தர் இருவரும் வாழ்ந்த சித்த பூமியாகும். இவ்விடத்தை சுற்றி பஞ்சவடீ என்னும் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலும் மத்தியில் சனீஸ்வர பகவான் க்ஷேத்திரமும் வடகிழக்கில் பிரத்தியங்கரா திருக்கோயிலும் கிழக்கு திசையில் புதுவை மணக்குள விநாயகர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பூமியில் புதுவை மாநில காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோயிலின் சிறப்பு அம்சங்களின்படி புதுவை மாநிலம் புதுச்சேரியின் வடதிசையில் சனீஸ்வர பகவானின் நீல கருழ் கலந்து கதுர் வீச்சும் பூமியில் அருள் சேகையும் பாயும் என்பதை புதுச்சேரி ஜோதிட சக்கரவர்த்தி சிவ ஸ்ரீ சிதம்பர குருக்கள் அவர்களின் கணவில் சனீஸ்வரபகவான் தோன்றியதால் பஞ்சபூதங்களால் ஏற்ப்படும் பேரழிவில் இருந்து உலக மக்களை காப்பாற்ற பஞ்சலோகத் தினால் ஆன 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவானை 27 நக்ஷத்திரங்களுக்கு நன்மை செய்வதர்க்காகவும் 12 ராசிக்காரர்களுக்கு ராசிபீடத்தில் அருள் பாலிக்கவும் இந்த சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். காடு செழித்தால் நாடு செழிக்கும் என்னும் பெரியோர் சொல்படி இங்கு 9 நவகிரஹங்களும் 12 அடி உயரத்தில் அவர்களுக்கு உரியமரத்தின் கீழ் அமைத்து, அதை சுற்றி 12 ராசிமரங்களும், 27 நக்ஷத்திர மரங்களும், 60 வருட மரங்களும் ஆக மொத்தம் 108 மரங்களுக்கு மத்தியில் நவகிரகங்கள் அமைந்து இருப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும்.2012 எற்பட்ட இருந்த பேரழிவில் இருந்து உலகமக்களை காப்பாற்ற வேண்டி 80 அடிஉயர மகாகும்ப ஸ்தம்பத்தில் 8000 லிட்டர் நல்லஎண்ணை விட்டு 1700 மீட்டர் காடாவை திரியாக போட்டு மகா கும்ப தீபம் சனிபெயர்ச்சி அன்று மாலை 5 மணிக்கு பேரொளி காட்டப்பட்டது. சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அவருடைய உச்சவீடான துலா ராசிக்கு வருவதால் 2012 ம் உலகம் அழிந்து விடும் என்று பலர் கூரினார்கள். ஆனால் அந்த அழிவில் இருந்து உலகை காப்பாற்ற வேண்டி சிவஸ்ரீ சிதம்பர குருக்கள் அவர்களின் குமாரர் சிவஸ்ரீ கீதா ராம குருக்கள் அவர்கள் சனிப்பெயர்ச்சி மகாயாகம் செய்து சனி பகவானை சாந்தப்படுத்தினார். அதன்பிறகு தானே புயலில் மிக அதிசியமாக ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாமலும், அதன்பிறகு சுமத்ரா தீவில் உண்டான ரிக்டர் அளவு கோல் 8.5 அதர்வு ஏற்ப்பட்டு இந்தியாவை தாக்ககயிருந்த நில நடுக்கத்தையும் எல்லாம் வல்ல சனிபகவான் காப்பாற்றினூர் என்பது கண் கூடா காட்சியாகும்.

இவ்வாலயத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் மூலமாக ஸ்ரீ லலிதாம்பிகை வேத சிவாகம பாடசாலையில் மாணவர்களுக்கு வேதம், ஆகமம், தமிழ் திருமுறைகள், ஜோதிடம் மற்றும் செய்முறை பயிர்ச்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது தினந்தோறும் ஏழை எளியோருக்கு அன்ன தானமும், கோசாலை அமைத்து அதில் பசு சம்ர­ணமும், கோ பூஜையும் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. மேலும் இவ்வாலயத்தில் அதிருத்ர மகா யாகம், மகா சன்டியாகம், மாதாந்திரங்களில் கணபதி ஹோமமும், கிழைமைகளில் நவக்கிரஹ ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பரிகார சாந்தி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் முதலியவைகளும் சிறப்பாக நடைபெறுகிறது.

இரண்டறை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது. சனீஸ்வர பகவானுக்கு 1008 லிட்டர் நல்லெண்ணை, 1008 லிட்டர் பால், அஷ்ட திரவ்யம் முறைப்படி அபிஷேகமும், சனி பகவானுக்கு எள்ளு அன்னம், 8000 எள்ளு உருண்டையுடன் அலங்கார தீபாராதனையும் நடைபயறும். பிறகு மாலை 6.00 மணிக்கு மகரகும்ப ஜோதி தரிசனமும் பேரொளி வழிபாடும் நடைபெறும். வருடத்திற்கு ஒரு முறை வரும் குரு பகவான் பெயர்ச்சியின் போது ருத்ர ஹோமம், 1008 கிலோ கடலை சுண்டல் நெய்வேத்யமும் அலங்கார தீபாராதனையும் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. 1 வருடத்திற்கு ஒருமுறை பெயர்ச்சி யாகும் ராகு, கேது கிரகங்களுக்கு 1008 லிட்டர் பால் அபிஷோகமும், 40,000 ஆயிரம் உளுந்துவடையும், 108 கிலோ கொள்ளு சுண்டலும் இறைவனுக்கு நெய்வேத்யம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

54 அடி உயர கிரஹசாந்தி கணபதிக்கு விநாயகர் சதுர்த்தியின்போது 1008 பருப்பு தேங்காய், 10,000 பொரி உருண்டையும் விசே­ ஹேமங்களும் செய்யப்படும். மாதாந்திர சங்கடஹர சதுர்த்தியின் போது விசே­ கணபதி ஹோமமும் 1008 கொழுக்கட்டை நெய் வேத்யம் செய்யப்படும்.

மேலும் இவ்வாலயத்தில் திருமணதடை, குழந்தைபாக்கியம், குடும்பப்பிரச்சனை செய்வினை கோலாறு, உத்யோக தடை, வெளிநாடு செல்ல தடை, சரீர வியாதி, மன உளச்சல் முதலியவைகளுக்கு நிரந்தரமாக தீர்வுகான ஸ்ரீ சனிபகவான் க்ஷேத்திரத்திற்கு வந்து பலன் அடைய வாரீர்.